கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்க குமாரதுங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இதன் போது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அவருக்கும், சந்திரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உடன்படிக்கையின் கீழ் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவும், கிழக்கு மாகாண சபையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அளுநர்களை மாற்றவும் இணங்கப்பட்டுள்ளது.
ஆனால் 13ம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எந்த தீர்வையும் தற்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம் என்று, சந்திரிக்கா இதன் போது சம்பந்தனிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கை குறித்த செய்திகள் மிகுந்த இரகசியமாக பேணப்பட்டு வருகிறது.

0 Responses to சந்திரிகா குமாரதுங்க – சம்பந்தன் இரகசியச் சந்திப்பு? ஒப்பந்தமும் கைச்சாத்து?