Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக வெற்றியீட்டினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

குருணாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுத்து பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டே மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டினார். பின்னர் யுத்தத்தை காரணம்காட்டி தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ள ஆரம்பித்தார்.

யுத்தத்திற்கு பின்னர் அவற்றை மீளப்பெறுவதாக கூறினார். யுத்தத்திற்கு பின்னர் என்ன செய்தார். தமக்கு எதிராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தார். ஊடக சுதந்திரத்தை இல்லாதொழித்தார். பிரதம நீதியரசரை அந்தப் பதவியிலிருந்து நீக்கினார்.

எமது கட்சியையை பிளவுபடுத்துவதற்கு முயன்றார். அது கைகூடவில்லை. ஏனைய அனைத்து கட்சிகளையும் பிளவுப்படுத்தினார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கு தமக்கு எவரும் உதவவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியிருந்தார். தோல்வியை கண்டே இவ்வாறு கருத்துக்களை கூறுகின்றார்.

நான் சவால் விடுக்கின்றேன். 19வது திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுமானால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு ஆதரவு வழங்கும் என்பதை நான் அன்று பாராளுமன்றத்தில் கூறியிருந்தேன். நானும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன்.

நாளை காலை அமைச்சரவையை கூட்டுங்கள். இதனை அவசர சட்ட மூலமாக உறுதிப்படுத்தி நீதிமன்றத்திற்கு அனுப்பிவையுங்கள். வேண்டுமாயின் திங்கட்கிழமை அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டுங்கள். விவாதம் ஒன்று இல்லாமல் அதனை நிறைவேற்றித் தருவததற்கு நாங்கள் தயார். தற்போது சந்தர்ப்பம் உங்கள் கையில் உள்ளது. நான் அதனை பகிரங்கமாக கூறுகின்றேன்” என்றுள்ளார்.

0 Responses to பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தே மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com