Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

என்னோடு ஒன்றாக இருந்தவர்கள் வெளியே சென்றதும் என் மீதே கத்தியைப் பாய்ச்சுகின்றனர். இது, எந்த விதத்தில் நியாயம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து காலத்துக்குக் காலம் வெளியே சென்றவர்களும் உள்ளே வந்தவர்களும் உள்ளனர். பண்டாரநாயக்கா, சிறீமாவைப் போன்று மஹிந்த ராஜபக்ஷவும் கட்சியை விட்டுப் போனதில்லை. ஏனென்றால், நான் கட்சியை நேசிப்பவன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரம் - திருகோணமலைக்கான வீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு அநுராதபுரத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பலரது பைல்கள் என்னிடமுள்ளது. நான் அவற்றை மேலே எடுப்பதில்லை. எனினும் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியக்கூடாது. இரவில் ஒன்றாய் அமர்ந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு காலையில் வெளியில் சென்று முதுகில் குத்துவது எந்த விதத்தில் நியாயம்?

‘அராபிய வசந்தம்’ என்ற பெயரில் அரபு நாடுகளில் நடப்பவைகளை நாம் யாவரும் அறிவோம். சிரியாவில் இன்றும் யுத்தம், லிபியாவில் கடாபியைப் படுகொலை செய்தனர். எகிப்தியத் தலைவரை சிறையிலடைத்தனர். அவருக்குப் பதிலாக இராணுவத்தை நியமித்துள்ளதுடன், அவரை சுதந்திரமாக இயங்கவிடவில்லை. இவ்வாறு முழு வளைகுடாவையும் ஸ்தம்பிக்கச் செய்தது மேற்கத்தைய ஏகாதிபத்தியவாதிகளே.

சூடானை இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளனர். அன்று இலங்கையிலும் அவர்கள் இதனையே செய்ய முற்பட்டனர். பயங்கரவாதத்துக்கு தூண்டுதலளித்தனர். புலிகளுக்கு நிதி வழங்கினர். அதற்கான சாட்சி எம்மிடமுண்டு.

புலிகளுக்குப் பணம் கொடுத்தே அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்தப் பார்த்தனர். ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரிகாவின் காலத்தில் இவை நடந்தன. இன்று அவர்கள் நல்லாட்சி பற்றி பேசுகின்றனர். ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். ஊடக சுதந்திரம் பற்றி பேசுகின்றனர். அவர்களின் ஊடக சுதந்திரம் பற்றி எமக்குத் தெரியும். இதுதான் அவர்களின் வரலாறு.

எமது கட்சியிலிருந்து கட்சிச் செயலாளர்கள் எத்தனையோ பேர் போகின்றார்கள் வருகின்றார்கள் அதற்குக் குறைவில்லை. மூன்று செயலாளர்கள் போய் திரும்பி வந்துள்ளார்கள். அவர்களது பெயரை நான் குறிப்பிடப் போவதில்லை. இது சகலரும் அறிந்ததே. இங்கிருந்து போய் அங்கு எதிர்பார்த்தது நடக்காவிட்டால் மீண்டும் இங்குதான் வரவேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to என்னோடு இருந்தவர்கள் வெளியே சென்றதும் என் மீதே கத்தியைப் பாய்ச்சுகின்றனர்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com