Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

தஞ்சை விளார்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பழ. நெடுமாறன் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது,

பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி உள்ளனர். தமிழ் இனம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச் சிறப்பாக தொடரும்.

உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப் போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு அந்த அரசு உதவி செய்துள்ளது.

ஆனால் எத்தனை இடர்பாடு வந்தாலும் அதை எதிர்த்து போராடியவர் பிரபாகரன்.

புலிகளை வீழ்த்த அனைத்து வழிகளிலும் இந்தியா உதவி செய்தது. மன்மோகன் சிங் செய்த தவறையே இன்றைய பிரதமர் மோடியும் செய்கிறார்.

இன்று இலங்கையில் சீனா கால் பதித்துள்ளது என்றால் ஆபத்து இந்தியாவை சூழ்ந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பிரபாகரன் தலைமையில் வலிமையான போராட்டம் தொடரும்.

எனவே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் வலிமை பெற, இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 Responses to தலைவர் பிரபாகரன் இன்னும் வீடு திரும்பவில்லை!- பழ.நெடுமாறன் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com