காஷ்மீர் மக்கள் காஷ்மீர் பிரச்சனைக் குறித்துப் பேசியே களைப்படைந்து விட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷீம்ர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று காஷ்மீர் மாநிலத்தில் கிஸ்துவார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி, காஷ்மீர் மக்கள் காஷ்மீர் பிரச்சனைக் குறித்துப் பேசிப் பேசியே களைப்படைந்து விட்டார்கள். இப்போது காஷ்மீர் மக்களுக்குத் தேவை வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமே என்று கூறியுள்ளார்.
காஷ்மீர் மழை நிவாரணத்துக்கு வழங்கிய நிதியை ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அப்படி அந்த நிதி ஒழுங்கு முறையில் பயன்படுத்தப்பட்டது என்றால் அதை விளக்கிக் கூற முடியுமா என்று உமர் அப்துல்லாவுக்கு கேள்வியும் எழுப்பியுள்ளார் நரேந்திர மோடி.

0 Responses to காஷ்மீர் மக்கள் காஷ்மீர் பிரச்சனைக் குறித்துப் பேசியே களைப்படைந்து விட்டார்கள்: பிரதமர்