மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து மேலும் சில உறுப்பினர்கள் எதிரணிக்கு தாவும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களை கோடிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.
2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது, அரசாங்க உறுப்பினர்கள் சிலர் எதிர்த்தரப்புக்கு செல்லவுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக, முக்கிய அமைச்சர்களான ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் பியசேன கமகே ஆகியோர் ஏற்கனவே அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை பாராளுமன்றத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் எதிர்த்தரப்புடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி தக்க வைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியின் பொது வேட்பாளராக ஆகியுள்ள நிலையில், இதுவரையில், அரசாங்கத்திலிருந்து 6 உறுப்பினர்கள் வெளியேறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மஹிந்த அரசிலிருந்து இன்னும் சிலரும் நாளை எதிரணிக்கு தாவலாம்!