சட்டப்பேரவையைக் கூட்டவில்லை என்கிற கவலை கருணாநிதிக்குத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மிகவும் காட்டமாகக் கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டுவதாக அறிந்தும், தமிழக அரசு இன்னமும் சட்டப்பேரவையைக் கூட்டாதது கவலை அளிப்பதாக இருக்கிறது என்று கருணாநிதி கூறியிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள பன்னீர் செல்வம், சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று சொல்லும் அருகதை கருணாநிதிக்கு இல்லை என்றும், முதல்வராக இருந்தால் மட்டுமே சட்டப்பேரவைக்கு வரவேண்டும் என்றும் கொள்கை கொண்டுள்ளவர் கருணாநிதி என்றும் கூறியுள்ளார்.
மேலும் சட்டபேரவைக்கு வருவது என்பது வெறும் வராண்டாவில் உள்ள கையேட்டில் கை எழுத்திட்டு செல்வது மட்டும்தான் என்று எண்ணியிருக்கும் கருணாநிதி, சட்டப்பேரவையைக் கூட்டுவதில் கவலைக்கொள்ளத் தேவையில்லை என்று மிகவும் காட்டமாகப் பேசியுள்ளார் பன்னீர்செல்வம். ஒரு சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த நிலையில் 6 மாத கால அவகாசம் அடுத்த சட்டபேரவைக் கூட்டத் தொடரைக் கூட்ட எடுத்துக் கொள்ளலாம் என்பது கருணாநிதிக்குத் தெரியாதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். அதோடு காவிரி தடுப்பணைகள் கட்டுவதுத் தொடர்பாக கர்நாடக அரசின் மீது புகார் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளதையும் பன்னீர் செல்வம் சுட்டிக் காண்பித்துள்ளார்.

0 Responses to சட்டப்பேரவையைக் கூட்டவில்லை என்கிற கவலை கருணாநிதிக்கு தேவையில்லை : முதல்வர்