இலங்கையின் 67வது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளின் இராணுவ அணிவகுப்பின் போது தேசிய அரசாங்கத்தின் தலைவர்களைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சதி முயற்சிகள் தொடர்பில் தனக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற எச்சரிக்கையைத் தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தின நிகழ்வில் குண்டுதுளைக்காத அங்கியை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திர தினத்தின் போது நடைபெறும் இராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது தலைவர் அல்லது தலைவர்களைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு எகிப்தில் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அன்வர் சதாத் கொல்லப்பட்டிருந்தது போன்றதொரு சம்பவத்தை இலங்கையின் சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி.பஸ்நாயக்கவுக்கு புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து விரைந்து செயற்பட்டு சதியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், யார் மீது குறிவைக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லையென்று அந்தச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்துக்கு அருகில் நடைபெற்ற 67வது சுதந்திர தின நிகழ்வின் போது இராணுவ அணிவகுப்பு மரியாதையில் இராணுவத் தளபாடங்களோ அல்லது விமானப்படையின் விமானங்களையோ காட்சிப்படுத்தத் தேவையில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to 67வது சுதந்திர தின தேசிய நிகழ்வில் அரச தலைவர்களை கொலை செய்யச் சதி?