Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் ஆடம்பர மாளிகைகளைப் பயன்படுத்தி வந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சமீபத்திய தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் என்னுடைய ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு 100,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உண்மையில் 27,280 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டிருந்தது.

என்னுடைய பாவனைக்கு அதிநவீன வசதிகளுடனான விமானமொன்றுக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், சிறிலங்கன் எயர்லைன்ஸ் புதிய எயர்பஸ் ஒன்றிற்கு உத்தரவிட்ட வேளை, அந்த விமானத் தயாரிப்பு நிறுவனம் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான விசேட தொகுதியை அன்பளிப்பாக வழங்கியது. அதனை தேவைக்கேற்ப பொருத்தலாம், மாற்றலாம். இதன் பெறுமதி 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள். எனினும் அவர்கள் அதனை இலவசமாக வழங்கினர்கள்.

நான் எனது பாவனைக்காக பல வீடுகளை கட்டியது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்கின்றனர். அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம், கண்டி மற்றும் நுவரெலியாவிலும் உள்ள இல்லங்களை இலங்கை அரச தலைவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அனுராதபுரம் மற்றும் மஹியங்கனை போன்ற பகுதிகளில் உள்ளவை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவினால் கட்டப்பட்டவை.” என்றுள்ளார்.

0 Responses to எனக்கு எதிராக மைத்திரி அரசு போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com