ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளதை நினைத்து டெல்லி காவல்துறை கலக்கம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, அமோக வெற்றியை கண்டு, வருகிற 14ம் திகதி தனித்து ஆட்சியமைக்க உள்ளது. இந்த சூழலில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை டெல்லி முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றபோது, டெல்லி காவல்துறையுடன் அடிக்கடி அவருக்கு மோதல் ஏற்பட்டது. ஆம் ஆத்மி கோரிக்கைகளை டெல்லி போலீசார் நிராகரிப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இதனால் டெல்லி போலீசாருக்கு பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இந்நிலையில் இப்போது முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ள நிலையில் இன்னும் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் ஏற்படுமோ என்று டெல்லி போலீசார் கலக்கத்தில் உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to ஆம் ஆத்மி ஆட்சியமைப்பதை நினைத்து டெல்லி காவல்துறை கலக்கம்!