இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற ஐக்கிய நாடுகளின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்று கூறியுள்ள அவர், இலங்கையின் புதிய அரசாங்கம் உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் மீள் விசாரணைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அது தொடர்பிலும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தர நிர்ணயங்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த முறையில் நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டியது இலங்கையின் முக்கிய கடமையாகும். உலகின் ஏனைய நாடுகளில் போன்றே யுத்தத்தின் பின்னர் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், பொறுப்பு கூறல்களின் ஊடாக நிலையான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம்; அதில் மாற்றுக் கருத்தில்லை: பான் கீ மூன்