Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி தேர்தல் தோல்விக் குறித்து ஆர்எஸ்எஸ்-பாஜக வருகிற ஞாயிறு அன்று ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது குறித்து இன்று காலை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது.இந்நிலையில் வருகிற ஞாயிறு அன்று ஆர்எஸ்எஸ்-பாஜக இரண்டும் சேர்ந்து ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி உளதாகத் தெரிய வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியை பலப்படுத்துவது எப்படி என்றெல்லாம் ஆலோசிப்பார்கள் என்று தெரிய வருகிறது.

டெல்லி முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியைக் களமிறக்க ஆர்எஸ்எஸ் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஆர்எஸ்எஸ்-பாஜக வருகிற ஞாயிறு அன்று ஆலோசனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com