Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக சமூகம் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பித்துள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம், யாழ் ஊடக அமையம் உள்ளிட்ட அமைப்புக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது முன்னெடுத்த திட்டமிட்ட படுகொலைகள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரைவைக் கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 Responses to ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com