Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம், அறிவுறுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற என்று, இடமாற்றம் செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என்று போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர், கல்லூரியை இடமாற்றம் செய்யும் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றும் பணிக்கு இடையூறாக இருக்கும் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தால் அதற்குத் தடை விதிக்க முடியாது என்று, நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். அதோடு மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு போராட்டத்தில் குதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியும் உள்ளனர்.

0 Responses to சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது!: உயர் நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com