Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்முறைக்கு ஆளான பெண்கள் அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான மையங்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.

 இன்று நாடாளுமன்றக் குழுக் கூட்டத் தொடரில் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ ரீதியாக உதவி பெறவும், மன ரீதியாக ஆலோசனை பெறவும், மீள் வாழ்வு உரிமைகளைப் பெற்று அவர்கள் நன்கு வாழவும் அனைத்து மாநிலங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி மேலும் பேசுகையில், தூய்மை இந்தியா திட்டத்தில் 50 சதவிகிதம் பொறுப்புக்களை நாடாளுமஹ்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 2022 ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு என்கிறத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் என்று தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சியில் ஏழைகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். அனைவருக்குமான வங்கிக்கணக்குத் திட்டம் என்பது 6 மாதங்களில் 100 சதவிகிதத்தை எட்டியுள்ளது ஆச்சரியமளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் விவசாயிக்களுக்கு உரிய இழப்பீடு தருவதில் மத்திய அரசு உறுதியாக் இரூக்கிறது என்றும், விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நாட்டின் பண வீக்கம் விகிதம் சீராக குறைந்து வருகிறது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரணாப் முகர்ஜி தமது உரையில் கூறியுள்ளார். கடைசியாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தித் தர கோரிக்கை வைத்துள்ளார் அவர்.

0 Responses to வன்முறைக்கு ஆளான பெண்கள் அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான மையங்கள்: பிரணாப் முகர்ஜி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com