Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரே வரவேண்டும் என்று முஸ்லிம் கட்சிகள் விரும்பினால் அதைப் பரிசீலிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவசர அவசரமாக முதலமைச்சரை நியமித்திருக்கத் தேவையில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸின் துணைத் தலைவர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்றுக் கொண்டமை தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “கிழக்கின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரே வரவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதை நாங்கள் பரிசீலிக்க தயாராக இருக்கின்றோம் என்று இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்த போது, அவர் என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு, நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பம் வாய்க்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் அவசரம் காட்டியிருக்க வேண்டியதில்லை.

கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சியமைப்பது என்பது தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்பட்டன. முதலமைச்சர் பதவியேற்றதன் பின்னரும் அது தொடர்கிறது. இவ்வாறான நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் அவசரம் காட்டிவிட்டது” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு நல்லிணக்கத்தைக் காட்டும் போது மு.கா. அவசரம் காட்டியிருக்கத் தேவையில்லை: ரிஷாட் பதியுதீன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com