மார்ச் 1 - 15 வரை பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
அடுத்தவர் நலம் காப்பதே லட்சியம் என்பதை கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் மேஷராசியினரே, நீங்கள் புதுமைகளை விரும்புகிறவர். இந்த காலகட்டத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ராசிநாதன் சஞ்சாரத்தால் எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் வேகம் பிடிக்கும். வீண் மனசஞ்சலம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும்.
அரசியல்வாதிகள் சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள். இதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். தொண்டர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். உங்களின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களைச் செய்வீர்கள்.
பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உங்கள் கடமையை சரியாகச் செய்யுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள்.
மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு நல்ல முறையிலேயே கிடைக்கும். உடல் ஆரோக்யம் வலுப்பெற சில எளிமையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி நவகிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும். இன்பங்கள் உண்டாகும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
உங்களது செயல்களை யாரும் குறை கூறக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்களை செய்யும் குணமுடைய ரிஷபராசியினரே இந்த காலகட்டத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். ராசிநாதன் சஞ்சாரத்தால் காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லை குறையும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்த சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைச் சாதனைகளாக மாற்றிக்காட்டுவீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் புதிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் ஏற்படும் இடையூறுகள் தானாகவே விலகி விடும். உங்கள் கருத்துக்களை அடுத்தவர்களிடம் திணிக்க முயல வேண்டாம்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். நல்ல வருமானம் கிடைக்கும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள்.
பெண்மணிகள் போதும் என்கிற மனநிறைவைப் பெறுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். சகோதர, சகோதரிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தாலும் அவர்களால் பெரிய நன்மைகள் உண்டாகாது. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும்.
மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற உயற்பயிற்சிகளையும், மன வலிமை பெற யோகா போன்றவைகளையும் மேற்கொள்வீர்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும், சுக்கிர பகவானுக்கு மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால் மனது மகிழும்படியான அளவில் காரியங்கள் நடக்கும். கடன் பிரச்சனை தீரும்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
சமய சந்தர்ப்பம் அறிந்து காரியங்களை செய்யும் மிதுன ராசியினரே நீங்கள் நுட்பமாக எதையும் ஆராய்வதில் வல்லவர். இந்த காலகட்டத்தில் மனோதைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். ராசிநாதன் சஞ்சாரத்தால் வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. திடீர் உடல்நலபாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. நிதானமான போக்கு காணப்படும். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நினைப்பதை தள்ளிபோடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பயணங்கள் தாமதப்படும்.
அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாக அமையும். உங்களின் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். மற்றபடி புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். கட்சியில் எவரிடமும் எதிர்ப்பைக் காட்ட வேண்டாம்.
கலைத்துறையினரின் புகழும், செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். உங்களின் முயற்சியும், உழைப்பும் வெற்றியைத் தேடித்தரும். மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தினரிடம் உங்கள் மதிப்பு உயரும். விருந்து, கேளிக்கைகளுக்கு செழிப்பாகச் சென்று வருவீர்கள். சிலர் புதிய வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்வார்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும்.
மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். மேற்படிப்புக்கான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரும். சிலர் மாலை நேரங்களில் தங்கள் படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேறு படிப்பைப் படித்து தங்கள் நிலையை உயர்த்திக்கொள்வார்கள்.
பரிகாரம்: சிவனையும் அம்பாளையும் வணங்கி வருவதுடன் நவகிரகத்தில் புதனுக்கு பச்சை பயிறு சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்க வாழ்க்கை வளம் பெறும். மனதில் நிம்மதி ஏற்படும்.
கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)
தந்திரமாக எதையும் செய்யும் கடக ராசியினரே நீங்கள் மற்றவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர். இந்த மாதம் சுபபலன்கள் உண்டாகும். எடுத்தகாரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். ராசிநாதன் சஞ்சாரம் மனோதிடத்தை தரும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசங்கள் கூடும். வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். வருமானத்திற்குக் குறைவு வராது என்றாலும் பொது பணிகளுக்காக உங்கள் கைப்பணத்தைச் செலவழிக்கும் முன் யோசனை செய்து கொள்ளுங்கள். மற்றபடி எதிரிகளின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து வளர்ச்சியைக் காண்பீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு உயரும். அதேசமயம் குறுகிய கண்ணோட்டத்தைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியாக வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அனாவசியச் செலவுகளைச் செய்ய நேரிடும். சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். எனவே அவர்களின் பழைய தவறுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.
பரிகாரம்: பவுர்ணமி பூஜை செய்து சந்திரனை வணங்கி தயிர் சாதத்தை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய குழப்பங்கள் நீங்கி மனதெளிவு உண்டாகும். பொருள் சேர்க்கை இருக்கும்.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
சாமர்த்தியமாக திட்டமிட்டு எதிலும் ஈடுபடும் சிம்மராசியினரே சில நேரங்களில் ஏற்படும் திடீர் கோபத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்யம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும்.
சாதகமான பலன்கள் இருக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்பீர்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவும், கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறி புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆனாலும் மாற்றுக் காட்சியினர் உங்கள் பேச்சில் குறை காண முயல்வார்கள். எனவே அனாவசிய விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மற்றபடி உங்களின் பெயரும், புகழும் உயரும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வீர்கள்.
பெண்மணிகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் குறைவு வராது. உங்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது. பண வரவு அதிகரிக்கும். குழந்தைகள் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் நடத்துவதில் ஏற்பட்ட தடைகள் விலகும். உற்றார், உறவினர்களுடன் ஒற்றுமை தொடரும்.
மாணவமணிகளின் படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோரின் உதவியுடன் நன்றாகப் படித்து வெற்றி பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்துவிட்டு ஆசிரியர் நடத்திய பாடங்களை அன்றைய தினமே படித்து மதிப்பெண்களை அள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொண்டு உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ளுங்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுகிழமையில் நவகிரகத்தில் சூரியனை வணங்கி கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருளை நைவேதியம் செய்து ஏழைகளுக்கு வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
பருவநிலை மாற்றம் போல் சில காரியங்களில் வெற்றி சில காரியங்களில் தோல்வி என்று மாறி மாறி அனுபவிக்கும் கன்னி ராசியினரே இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்துமுடியும். அலைச்சல்களும் குறையும். செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் வரவும் இருக்கும். ராசிநாதன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்யம் பெறும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். "உழைப்பே உயர்வு' என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். ஆனாலும் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவு உங்கள் மன வருத்தத்தைக் குறைக்கும் மருந்தாக அமையும். வரவேற்புகள் குறைந்தாலும் நிலைமை போகப் போக மாறிவிடும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும் கணவர் வழி உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலம் பெறவும்.
மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு நன்றாகவே அமையும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
காந்தம் இழுப்பது போல் எவரையும் தம்பால் இழுத்துக்கொள்ளும் சக்தி படைத்த துலா ராசியினரே இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ராசிநாதன் சஞ்சாரம் பெண்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். உடல் ஆரோக்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து அதனால் சில பொறுப்புகளையும் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை மறைமுகமாக எதிர்த்தவர்கள் அடங்கிவிடுவார்கள். அதேநேரம் தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். பிறரிடம் பேசும் நேரத்தில் எச்சரிக்கை தேவை.
கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும், விருதுகளும் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். மற்றபடி உங்களின் எண்ணங்களுக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டாம். அனாவசியச் செலவுகளையும் செய்ய வேண்டாம்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். கணவரின் அன்பைப் பெறுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். உறவினர்களுடன் சச்சரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவும். அனைவருடனும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும்.
மாணவமணிகள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அனாவசிய விஷயங்களுக்காக நண்பர்களுடன் சண்டை வேண்டாம். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கடன் பிரச்சனை சொத்து தகராறு தீரும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
நலிந்தவர், நியாயமுள்ளவர்களுக்காக போராடும் குணமுடைய விருச்சிக ராசியினரே இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். ராசிநாதன் சஞ்சாரத்தால் மனதுக்கு பிடித்தமான காரியங்களை செய்து மனநிறைவடைவீர்கள். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும்.
வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளால் பெருமை பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறனால் மாற்றுக் கட்சியினரையும் கவர்வீர்கள். தொண்டர்கள் உங்களுக்குக் கீழ் படிவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவால் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். அனைவரையும் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை ஏற்பீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சக கலைஞர்களுடன் விரோதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
பெண்மணிகளுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார், உறவினர்களிடம் ரகசியங்களைப் பேச வேண்டாம்.
மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து படித்து வைத்துக்கொள்ளவும். உங்கள் கனவுகள் பலிக்கும். மற்றபடி விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரம்: கார்த்திகை தினத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வணங்க பிரச்சனைகள் தீரும். மனோ தைரியம் கூடும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
எந்த ஒரு வேலையும் மிகவும் சரியாக நடக்க வேண்டும். காலத்தை வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தனுசு ராசியினரே இந்த காலகட்டத்தில் எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். ராசிநாதன் சஞ்சாரத்தால் எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களையும் தீர்க்கும் வல்லமை ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கைநழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்க பெறலாம். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசனை கேட்டு சில காரியங்கள் செய்து நல்ல பலன் அடைவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். எதிர்கட்சியினரை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். அதேநேரம் எவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.
பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். வருமானம் திருப்தியாக இருப்பதால் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வீர்கள்.
மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உங்கள் தேவைகளைப் பெற்றோர் பூர்த்தி செய்வார்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதனால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வணங்க பணவரத்து கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும்.
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
சுயநலமற்று சமூக நன்மைக்காக பாடுபடும் குணமுடைய மகர ராசியினரே நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். இந்த காலகட்டத்தில் தொடக்கத்தில் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். ராசிநாதன் சஞ்சாரத்தால் ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. கடன் விவகாரங்கள் காலதாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் கவனமாக பணி செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களையும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும். அவர்களின் தேவைகளைத் தக்கபடி பூர்த்தி செய்யவும். கட்சிக்கு நலம் சேர்க்கும் பிரச்சாரங்களில் மட்டுமே ஈடுபடவும். மற்றபடி கட்சியின் புதிய கொள்கைகளைப் பிரபலப்படுத்துவீர்கள். கட்சியில் உங்கள் புகழும், செல்வாக்கும் உயரும்.
கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். வெளியூர் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்கள் தகுதிக்குக் குறைவானவர்களிடம் நட்பு வேண்டாம்.
பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் பேச்சை உற்றார், உறவினர்கள் கேட்டு நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். பொறுமையுடன் பதற்றப்படாமல் படிக்கவும். தற்போது நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் எதிர்காலத்திற்கு சிறப்பான அடித்தளமாக அமையும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணை சாற்றி வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரியதடைகள் நீங்கும்.
கும்பம் :(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
நிர்வாக திறமையும், குடும்ப பொறுப்பும் மிக்க கும்பராசியினரே, இந்த காலகட்டத்தில் பணவரத்து இருக்கும். எந்த விஷயத்திலும் உடனடி தீர்வுகாண முடியாத இழுபறி நிலை காணப்படும். ராசிநாதன் சஞ்சாரத்தால் புதியநட்புகள் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்தும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது.
பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
அரசியல்வாதிகள் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மற்றபடி தொண்டர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.
பெண்மணிகளுக்கு தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும்.
மாணவமணிகள் படிப்பில் முன்னேறுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு அமோகமாக அமையும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி சனிஸ்வர பகவானையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மன உறுதியுடன் இருக்கும் மீன ராசியினரே நீங்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். ராசிநாதன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை உண்டாக்கும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
பலவகையிலும் வருமானம் கிடைக்கும். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும். குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும்.
அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட இலக்குகளை எட்டும். உங்களின் நெடுநாளைய லட்சியம் நிறைவேறும். தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும்.
கலைத்துறையினர் சிறிது ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டாலும் ஓரளவே புகழ் கிடைக்கும். மற்றபடி வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும்.
பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அதேசமயம் உங்கள் கடமையை சரிவர ஆற்றுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள்.
மாணவமணிகள் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். வெளி விளையாட்டுகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்
4தமிழ்மீடியா

0 Responses to இருவார ராசி பலன்கள் - மார்ச் 1 - 15 வரை