Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கான விஜயத்தை எதிர்வரும் 06ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் தொடர்பில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

எதிர்வரும் 13ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதற்கு முன்னர், 1987ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

0 Responses to மோடியின் பயண திட்டங்களை இறுதி செய்வதற்காக சுஷ்மா சுவராஜ் இலங்கை வருகிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com