Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு வழங்கிய ஆதரவினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை விலக்கிக் கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை மாகாண ஆளுநரிடம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச்சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, டப்ளியு.டி.எச் வீரசிங்க, ஜயந்த விஜேசேகர, டி.எம்.ஜயசேன, தேசிய காங்கிரஸை சேர்ந்த எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் எம்.எல்.எம். ஆமீர் லெப்பை ஆகியோரே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

திருகோணமலை, கிறீன் வீதியிலுள்ள சன்செடன் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட அறுவரில் நால்வரே தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர்.

இதனிடையே, முஸ்லிம் காங்கிரஸூக்கான ஆதரவினை விலக்கிக் கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆறு பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று பிற்பகலில் சந்தித்து உரையாடியிருந்தனர்.

0 Responses to கிழக்கு மாகாண சபை ஆட்சி கவிழ்கிறது; மு.கா.வுக்கு வழங்கிய ஆதரவை 6 உறுப்பினர்கள் விலக்கினர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com