Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம், தான் முன்னெடுத்துள்ள 100 நாள் செயற்திட்டம் தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோருகின்றது.

100 நாள் செயற்திட்டம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதினூடு இன்னும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொதுமக்கள் பங்கேற்புடன் மிகவும் பயன்மிக்க, வினைத்திறன் மிக்க மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வகையில் இந்த வேலைத் திட்டத்தினை வெற்றி பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.

இந்தவேலைத் திட்டம் தொடர்பான பூரணமான விவரங்கள், தகவல்கள் மற்றும் அதன் தற்போதைய நிலைமை என்பவற்றை www.pmm.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான உங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், பிரேரணைகள், குற்றச்சாட்டுக்களை பணிப்பாளர் நாயகம், செயற்றிட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கிக் கட்டடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும்.

இணையத்தளத்தின் ஊடாக தெரிவிப்பதாயின் 100dayfeedback@pmm.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தெரிவிக்கலாம். தொலைபேசி ஊடாக தெரிவிப்பதாயின் 011 24 77 915 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும்.” என்றுள்ளது.

0 Responses to 100 நாள் செயற்திட்டம் தொடர்பில் தேசிய அரசாங்கம் பொதுமக்களிடம் கருத்து கோரியுள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com