புதிய தேர்தல் முறைமை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் பாதுகாப்பதாக அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “என்ன விதமான தேர்தல் முறைமை ஏற்பட்டாலும் கட்சிகள் வேட்பாளர்கள் நியாயமாக வெற்றி பெற்று தங்களுடைய பிரதிநிதித்துவத்தை முழுமையை பெறக்கூடிய அளவிலான தேர்தலாக இருக்க வேண்டும். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த விடயம் தொடர்பில் தற்பொழுது பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது நிச்சயமாக அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் வருமோ இல்லையோ தெரியாது.
தொகுதி வாரியையும் கொடுத்து விகிதாசாரம் வாக்குமுறையையும் கொடுத்து தேர்தல் வைப்பதாக இருந்தால் தொகுதி வாரியான தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தொகை நிச்சயமாக குறையும். இரண்டும் கலக்கின்ற போது முடிவு என்ன மாதிரி என்று நிச்சயமாக சொல்ல முடியாது. விசேடமாக இன்று வரையில் அந்த தொகுதிகள் எந்த அளவிற்கு என்ன தொகுதியாக இருக்கும் என்ன என்ன தொகுதிகள் பழைய தொகுதிகளாக இருக்க முடியாது. அந்த தொகுதிகள் என்ன விதமாக நிர்ணயிக்கப்படும் என்பது தொடர்பில் எவ்வித முடிவும் இது வரையில் இல்லை. ஆனால், தேர்தல் முறைமை அறிவித்து இது விடயம் தொடர்பில் நிறைவேற்றும் போது சிறுபான்மை பிரிதிநிதித்துவம் குறையாமல் அது பாதுகாக்கும் வகையில் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய தேர்தல் முறை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைப்பதாக அமையக் கூடாது: சம்பந்தன்