இலங்கை - இந்திய (தமிழக) மீனவர் பிரதிநிதிகளுக்கிடையேயான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 12ஆம் திகதி தமிழகத்தில் நடத்துவதற்கு இலங்கை தயாராக உள்ளதாக தமிழக அரசுக்கு அறிவித்திருப்பதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக தமிழகத்துக்கு அறிவித்துள்ளபோதும் தமிழகத்திலிருந்து எதுவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை கடந்த 5ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் இதனைப் பிற்போடுமாறு இலங்கை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை வரவுள்ள நிலையில் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தற்பொழுது இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் அமைச்சர், மோடி இலங்கைக்கு வரவிருப்பதால் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையை 12 ஆம் திகதிக்குள் தொடங்குமாறு இந்தியத் தூதுவர் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் அப்பகுதியைச் சேர்ந்த மதத் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை: 3ஆம் சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 12ஆம் திகதி?