Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள், அரச அதிபர்கள் உள்ளிட்டவர்கள் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதனையடுத்து, இராணுவப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மைத்திரி தலைமையில் வடக்கு அபிவிருத்திக் கூட்டம் யாழில் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com