Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் செயற்பாடுகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி பூரணமாக ஆதரிப்பதாக அந்தக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் கருத்து வெளியிட்டார்.

அதில், “இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையின் நிலைமையை ஆராய்ந்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் படி இந்த புதிய அரசாங்கம் தமிழர்களின் காணிகளை மீள கையளித்தல் வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், காணாமற்போனோர் சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு அரசை வலியுறுத்துகின்றது.

அத்துடன், போர் சூழலில் இடம்பெயர்ந்த ஒவ்வொருவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் வகையில் செயற்பட வேண்டும் என அரசை வற்புறுத்துகின்றது.

இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றது” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பின் செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்கின்றது: மத்தியகுழு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com