இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணை சர்வதேச விசாரணைக்கு நிகரானதாக அமைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் நீண்டகால இழுபறிக்குள்ளாகியிருக்கும் காணி, அரசியல் கைதிகள் தடுத்து வைத்தல், காணாமற்போதல் மற்றும் பொதுமக்கள் வாழ் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் ஆகிய பிரச்சினைகளுக்கு மிக குறுகிய காலத்திற்குள் தீர்வு காண முயற்சிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினரை சந்தித்து பல விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களிடம் பேசினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெப்ரி பெல்ட்மன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் சபையானது தனது உறுப்பு நாடுகளால் முன்னெடுக்கப்படும் சர்வதேச தரத்தினாலான உள்ளக விசாரணைக்கு நிச்சயமாக ஆதரவு வழங்கும். எனவே, அந்த வகையில், இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையும் சர்வதேச தரம், சர்வதேசத்திலுள்ள வழக்கங்கள், மனித உரிமை சாசனங்கள், ஐக்கிய நாடுகளின் ஆவணங்கள் ஆகியவற்றை பின்பற்றியதொரு பொறிமுறையாக அமையும் பட்சத்தில் அதனை நம்பகத்தன்மையுடையதாக ஏற்றுக்கொள்ளும். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களும் இதனை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளலாம்.
புதிய அரசாங்கத்திற்கு நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கால அவகாசம் தேவையென்பதனாலேயே இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஏற்று இலங்கை தொடர்பில் முன்வைக்கவிருந்த அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்க முடிவு செய்தது. எதிர்பார்ப்பு கூடிய இந்த விடயம் எத்தனை சிக்கலானது என்பதை எம்மால் அறிந்து கொள்ள முடியும். அரசாங்கம் தான் விரும்பிய கால எல்லையை வரையறையாக கொண்டு செயற்பட முடியும்.
எனினும், இப்போது முதல் செப்டெம்பர் மாத அமர்வு வரையிலான காலப்பகுதிக்குள் அரசாங்கம் வெளிப்படையாக எத்தகைய பொறிமுறையை கையாண்டுள்ளது என்பதனை அவர்கள் எதிர்வரும் அமர்வில் வெளிப்படுத்தும் விதம் அரசாங்கத்தின் ஆர்வம் மற்றும் முயற்சியை எமக்கு தெரியப்படுத்துமென நம்புகின்றோம். குறுகிய காலமென்னும் போது, செப்டெம்பர் மாதத்திற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இருக்க வேண்டும். இதுவே, புதிய அரசாங்கம் தமது செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு வழங்கிய செய்தியாக அமையும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் உள்ளக விசாரணை சர்வதேச விசாரணைக்கு நிகரானதாக அமைய வேண்டும்: ஜெப்ரி பெல்ட்மன்