இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால், இந்த மாதம், இலங்கை அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமைந்திருக்கும்.
வழக்கமாகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வு நடைபெறும் காலம், இலங்கை அரசுக்கு கடுமையான நெருக்கடிகள் மிக்க காலமாகவே இருந்திருக்கிறது.
2012ஆம் ஆண்டு, அதிகாரிகள், அமைச்சர்கள் என்று கிட்டத்தட்ட 72 பேர் கொண்ட பெரியதொரு குழு ஜெனீவாவில் முகாமிட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்காகவே இந்தக் குழு ஜெனீவா சென்றிருந்தது.
இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய அரசாங்கத்துக்கு ஜெனீவாவில் மார்ச் மாத அழுத்தங்கள் அவ்வளவாக இல்லை. என்றாலும், நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள பேரவையின் கூட்டத்தொடரில், உயர்மட்டப் பிரதிநிதிகளின் அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவுள்ளார்.
இதில் அவர், உள்ளநாட்டு விசாரணைப் பொறிமுறை பற்றிய தமது வாக்குறுதிகளை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், ஜெனீவாவுக்கான பயணத்தை பீஜிங்கில் இருந்தே ஆரம்பித்திருந்தார்.
கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களை அவர் சீனாவில் கழித்திருந்தார். வெளிவிவகார அமைச்சராக கடந்த ஜனவரி இரண்டாவது வாரத்தில் பொறுப்பேற்ற பின்னர், மங்கள சமரவீர சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல்பயணம் இதுவாகும்.
அதைவிட இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கொழும்பில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் உயர்மட்டப் பிரமுகரும் இவரேயாவார். எனினும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில், நடைபெறும் உயர்மட்ட சந்திப்பு இதுவே என்று கூற முடியாது.
ஏனென்றால் சீன அதிபரின் விசேட தூதுவராக உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சோ ஏற்கனவே கொழும்புக்கு வந்திருந்தார். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்த போது அவற்றை இடைநிறுத்தப் போவதாக இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போத சீன அரசின் விசேட தூதுவராக லியூ ஜியான்சோ கொழும்பு வந்தார்.
அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரம சிங்க உள்ளிட்ட இலங்கை இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சுகளின் பின்னர் சீனாவின் திட்டங்கள் குறித்த, முக்கியமான கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளின் மாற்றங்கள் தென்படுகின்றன.
எதிர்கட்சியில் இருந்த போது, தாம் ஆட்சிக்கு வந்தால் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று வீரவசனம் பேசிய இப்போதைய அரசாங்கத் தலைவர்கள் அனைவருமே சீன அரசின் விசேட தூதுவரின் வருகைக்குப் பின்னர் அடங்கிப் போயினர். அவர் கொண்டு வந்த செய்தி மிகவும் கடுமையானதாக இருந்திருக்கலாம்.
1.5 பில்லியன் டொலர் செலவில் கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்மானிக்கும் பொறுப்பை சீனாவே ஏற்றிருந்தது. அந்த உடன்பாடு, முன்னைய அரசாங்கத்தினால் எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் கையெழுத்திடப்பட்டது என்பது உண்மையே என்றாலும் அது ஒரு சர்வதேச இருதரப்பு உடன்பாடு என்பது முக்கியமான விடயம்.
ஒரு சர்வதேச இருதரப்பு உடன்பாட்டை முறித்துக்கொள்வதன் பிரதிபலனை எதிர்கொள்ள நேரிடும் என்று சீனா எச்சரிக்கை செய்திருக்கலாம். அதனால் தான், இந்த திட்டத்தின் 25 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்துள்ளதாகவும் தற்போதைய கட்டத்தில் இதனை இடைநிறுத்துவதனால், அதற்கு ஏற்பட்ட செலவை சீனாவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டி எற்படும் என்றும், இந்தியாவிடம் கூறியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அதாவது சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை ரத்துச் செய்யத் தயாரில்லை என்பதே, இலங்கை அரசாங்கத்தின் இறுதி முடிவாக மாறிவிட்டது. ஆனால் அதனை வெளிப்படுத்துவதற்கு இருக்கின்ற தயக்கம் காரணமாக அறிக்கைகள், ஆய்வுகள், மீளாய்வு என்று இழுத்தடிக்கப்படுகிறது, இப்போதைய நிலையில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்க இலங்கை அரசாங்கம் தயாராகிவிட்டது. ஆனால் அந்த உடன்பாட்டில் சில திருத்தங்களை மேற்கொள்ள விரும்புகிறது.
கொழும்பு துறைமுக நகரத்தில் 20 ஹெக்ரெயர் நிலப்பரப்பை சீனாவுக்கு சொந்தமாக வழங்கும் உடன்பாட்டு விதிகளை மாற்றியமைக்க விரும்புகிறது இலங்கை. கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளியிட்ட கருத்துகளில் இருந்து இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அவரது அந்த உரை சீனாவின் பொருளாதார பலம் குறித்து இலங்கை அச்சம் கொண்டுள்ளதும் கொழும்புத் துறைமுக நகரத்தில் அதன் இராணுவத்திட்டங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தைக் கொண்டிருப்பதையும் உணர்த்தியிருக்கிறது.
எப்படியாவது சீனாவுக்கு நிலத்தை உரிமையாக எழுதிக்கொடுக்காத வகையில் உடன்பாட்டை மாற்றியமைப்பதே இப்போதைய இலங்கை அரசாங்கத்தின் சவால்மிக்க காரியம். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் சீனப்பயணத்திலும் இதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அவரது பயணத்துக்கு முன்னரே எதிர்வு கூறப்பட்டிருந்தது.
சீனாவில் அவரது பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் இந்தப் பத்தி எழுதப்படும் போது வெளியாகவில்லை. எனினும் கொழும்புத் துறைமுக நகர விவகாரம் தான் புதிய அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு விவகாரமாக உள்ளது.
புதிய அரசாங்கம் சீனா, இந்தியா, உள்ளிட்ட எல்லா நாடுகளுடனும் சமமான உறவைப் பேணப்போவதாக புதுடில்லியில் வைத்தே கூறியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இது இந்தியாவுக்கு ஒரு வகையில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். புதிய அரசாங்கம் சீனாவைக் கைவிட்டு ஒரேடியாக இந்தியா பக்கம் சாய்ந்து விடும் என்று இந்திய அரசாங்கம் எதிர்பார்திருக்கலாம்.
ஆரம்பத்தில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் அது நடைமுறைச் சாத்தியமான காரியமல்ல என்பது இந்தியக் கொள்கை வகுப்பாளருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள மிகப் பெரியளவிலான பொருளாதார உறவு, அவ்வளவு இலகுவாக அதனிடம் இருந்து இலங்கையை விலகிச்செல்ல இடமளிக்காது.
இந்த உண்மையை உணர்ந்து கொண்டதாலோ, இந்தியாவும் அணிசேரா நாடுகளில் ஒன்று என்பதாலோ மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அடங்கி கொண்டது புதுடில்லி.
இந்தியாவும் ஒரு அணிசேரா நாடு என்பதை உணர்ந்து கொண்டே தாம் தொடர்ந்தும் அந்தக் கொள்கையைக் கடைபிடிப்போம் என்று தந்திரமாக நழுவியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இந்த விடயத்தில் சீனாவையும் இந்தியாவையும் புதிய அரசாங்கம் திறமையாகவே கையாளத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புது டில்லிப் பயணத்தை முடித்து விட்டு வந்தாலும் இந்தமாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வரப்போகிறார்.
சீனா விடயத்தில் இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் தான் நடந்து கொள்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லி வந்த போது நடத்தப்பட்ட பேச்சுக்களில் விடுபட்ட விவகாரங்களை வைத்து இலங்கைக்கு அவர் அழுத்தங்களைக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக மங்கள சமரவீரவின் பீஜிங் பயணத்தின் பின்னர் ஏற்படும் நிலைமைகளைப் பொறுத்து காய்களைநகர்த்தக் காத்திருக்கிறது இந்தியா. எனவே நரேந்திர மோடி கொழும்பு வந்து செல்லும் வரை இலங்கை அரசாங்கத்தினால் நிம்மதி கொள்ள முடியும். அது போலவே இந்தியப் பிரதமர் கொழும்பு வந்து சென்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிம்மதியாக இருக்க முடியாது.
ஏனென்றால் இம்மாத இறுதியில் அவர் சீனாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அங்கும் அவர் நிச்சயம் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
முன்னைய அரசாங்கம் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட இருதரப்பு உடன்பாடுகளை மதித்து நடக்க வேண்டியது ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட புதிய அரசாங்கத்தின் கடப்பாடு என்று ஏற்கனவே சீனத் தரப்பில் இருந்து கருத்து வெளியாகியிருந்தது.
எனவே முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களைத் தொடர்வதற்கான உறுதிப்பாட்டை மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து சீனா எதிர்பார்க்கும். அதற்காக சீனா தனது எல்லா சக்திகளையும் பயன்படுத்தவும் கூடும். அதையும் சமாளித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிம்மதி கொள்ளலாம்.
சீனா, இந்தியா என்ற இரண்டு உலக மகா சக்திகளுக்கு இடையேயும் அணி சேராமல் செயற்பட எத்தனிக்கும் புதிய அரசாங்கத்துக்கு இந்த மாதம் ஒரு சோதனைக்குரிய மாதமாகவே இருக்கப்போகிறது.
மார்ச் மாத ஜெனீவா பொறியில் இருந்து தப்பித்தாலும் இந்த பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறது புதிய அரசாங்கம்.
ஹரிகரன்

0 Responses to இலங்கை எதிர்கொள்ளும் மார்ச் மாத சவால்! - ஹரிகரன்