Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டக் கூடும் என்று அந்நாட்டு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்களில் நேபாள நாடே சீர்குலைந்த நிலையில், காத்மாண்டுவில் பழமையான புராதன சின்னங்களோடு நகரமே சீற்குலைந்துக் கிடக்கிறது. மீட்புப் பணிகளில் பாகிஸ்தான், இந்தியா,அமெரிக்கா, சிரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கெடுத்துக் கொண்டு, ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதற்கு நேபாள் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிச்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் உதவ முன் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் அங்கங்கு சுகாதார முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் நேபாள நாட்டு மக்கள் இன்னமும் பீதியிலிருந்து வெளிவராததால், நாட்டை விட்டு பல ஆயிரம் மக்களும் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் நேபாள அரசு 3 நாள் துக்க நிலை அனுஷ்டிக்க அறிவித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை எட்டி உள்ளதால், இன்னும் மீட்புப் பணிகள் பாதி கூட முடிவடையாத நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டக் கூடும் என்று, அந்நாட்டு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

0 Responses to நேபாளத்தில் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டக் கூடும்: நேபாள் பிரதமர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com