Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் முன்னெடுத்துள்ள விசாரணைகளின் அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியிருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை அண்மையில் சந்திந்திருந்தார். இந்தச் சந்திப்பின் போதே சையத் அல் ஹூசைன், தன்னிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் ருவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிச்சயமாக வெளியிடப்படும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியிருக்கும்: சையத் அல் ஹூசைன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com