Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியக் கொடியில் மாற்றம் செய்து அதனை போராட்டத்தில் பயன்படுத்திய விவகாரம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்னால் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்கள் உள்ளடக்கப்படாத இலங்கை தேசியக் கொடியை ஒத்த கொடி பயன்படுத்தப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக தெரியவருகின்றது.

இதனிடையே, குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் தேசியக் கொடி உருமாற்றப்பட்ட விடயத்திற்காக மன்னிப்புக் கோரியுள்ளனர்.

0 Responses to தேசியக் கொடியை தவறாக கையாண்டமை; விசாரணைகள் ஆரம்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com