இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
அஞ்சலி நிகழ்வுகள், சமயக் கிரிகைகள் எனும் வடிவங்களில் இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்தோடு, உலகம் பூராவுமுள்ள தமிழ் மக்களினாலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றன.
2009 மே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்தது. இதன்போது, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவு கூருவதற்கான அனுமதி இலங்கை அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் மறுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், புதிய அரசாங்கம் மோதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூருவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது என்றும் அறிவித்துள்ளது.

0 Responses to மே 18; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!