ஜெயலிதாவின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடுக் குறித்து நாளுக்கு ஒரு அறிக்கை என்று விடுத்து வருகிறார் பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியசாமி.
கடந்த திங்கட்கிழமை அன்று சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. அப்போது இந்த விடுதலை தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக சுப்ரமணிய சாமி தெரிவித்தார். மேல் முறையீட்டுக் குறித்து யோசிப்பேன் என்றும் கூறியிருந்தார். அடுத்த இரண்டு நாட்களில் கர்நாடக அரசு, நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவில்லை என்றால் நான் மேல் மேல்முறையீடு செய்வேன் ஏன்று கூறினார்.
மேலும், அடுத்த இரண்டு நாளில் மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்று கூறினார், அடுத்த நாள் கர்நாடக அரசுடன் சேர்ந்து மேல் முறையீடு செய்வதாகக் கூறினார். இப்போது கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தாலும், செய்யவில்லை என்றாலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

0 Responses to நாளுக்கு ஒன்றாக அறிக்கை விடும் பாஜகவின் சுப்ரமணிய சாமி