தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பு உள்ளதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின் தம்பி தமிழரசுவின் மகனும், நடிகருமான அருள் நிதிக்கு விரைவில் திருமணம் நடைப்பெற உள்ளது. இந்த திருமணத்துக்கான அழைப்பிதழை ஸ்டாலின் மிக முக்கியத் தலைவர்கள் மற்றும் அரசியல் வாதிகள், நடிகர்கள் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து கொடுத்து வருகிறார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்டவர்கள் மற்றும் பாஜக தமிழகத் தலைவர் தமிசை சவுந்திரராஜன், காங்கிரஸ் தமிழகத் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இவர்களை சந்தித்து அழைபிதழ் கொடுத்துள்ளார்.
நேற்று ஸ்டாலின் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றார். அங்கு வைகோவுக்கு பொன்னாடை போர்த்தி அழைப்பிதழை வழங்கினார். அப்போது வாய் திறந்த ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். இதை ஆமோதிப்பது போல வைகோவும் பதில் அளித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஜெயலலிதாவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பு: ஸ்டாலின்