Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரை ஏற்றிக்கொண்ட வழக்கில் குற்றவாளிதான் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு 27ம் திகதி மும்பை பாந்திரா பகுதியில் சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைய ஒருவர் பலியாகி இருந்தார். விபத்து நடைப்பெற்றபோது சல்மான் காரை ஓட்டவில்லை என்று சல்மான்கான் தரப்பு வாதிட்டது. ஆனால் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று காவல்துறை தரப்பு வாதிட்டது. இந்நிலையில் சல்மான்கான்தான் காரை ஓட்டினார் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே, இவ்வழக்கில் சல்மான்கான்தான் குற்றவாளி என்றும் மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

13 ஆண்டுகளுக்குப் பின்னர் சல்மான்கான்தான் குற்றவாளி என்று பாந்திரா நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.இதையடுத்து சல்மான்கான் உடனடியாகக் கைது செய்யப்படலாம் என்றும், 10 ஆண்டுகள் வரை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to சல்மான் கான் குற்றவாளி: மும்பை அமர்வு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com