முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் பேரணிகளால் சமாதானம் குலையும். எனவே எந்த நிகழ்வுகளையும் முள்ளிவாய்க்காலில் நடத்தக்கூடாது என பொலிஸார் நீதிமன்றைக் கோரியதற்கு அமையவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இறுதி மோதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை (மே 18) தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்த முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து விருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதால் சமாதானம் சீர்குலையும் என முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதையடுத்தே, இப்பகுதியில் இடம்பெறவிருந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் முல்லைத்தீவு நீதிமன்றம் தடைவிதித்தது. மேலும் இரு வாரங்களுக்கு இந்தப் பகுதிகளில் எந்த நினைவேந்தல் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை!