முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கும் கருத்து, நீதிமன்ற சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலானது என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான பதில் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் வழங்கப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
23/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, கோத்தாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான தீர்ப்பு குறித்து பிரதமர் தெரிவித்துள்ள கருத்துக்கள் நீதிமன்றத்திற்கு தேவையற்ற தலையீடு செய்வதாக இருப்பதாகவும் இதனால் நீதிமன்ற சுதந்திரத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை சவால் விட முடியாது எனவும் குறிப்பிட்ட அவர் பிரதமரின் கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, “அரசாங்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறது. ஆனால் எந்த தீர்ப்பையும் விமர்சிக்க சகலருக்கும் உரிமையிருக்கிறது. தீர்ப்பிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட முடியும். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க முடியாது என பரவலாக பேசப்படுகிறது. ஆனால், சாதாரண பிரஜைகளுக்கும் இது குறித்து கருத்து கூற முடியும்.
அரசியலமைப்பின் 132 ஆவது சரத்தின் பிரகாரம் மூன்று பேருக்குக் குறையாத உச்ச நீதிமன்ற நீதியரசர்களே வழக்கை விசாரிக்க வேண்டும். அந்த குறை பாட்டையே பிரதமர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to பிரதமரின் கருத்து நீதிமன்ற சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலானது: நிமல் சிறிபால டி சில்வா