சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு விருப்பம் இல்லை என்பது போலத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக அரசு ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாம் என்று, சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா அறிவுறுத்தி இருந்தார். தீர்ப்பில் அவ்வளவு கணக்குப் பிழைகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக் காண்பித்து இருந்தார். மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றால் வருகிற 1ம் திகதிக்குள் செய்துவிட வேண்டும் என்றும் தெரிய வருகிறது.
வருகிற 21ம் திகதி இதுக்குறித்து ஆலோசிக்க கர்நாடக அமைச்சர்கள் கூட்டம் கூட உள்ளது. எனினும் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு பிரச்சனைக்கும், கர்நாடக அரசுக்கும் தொடர்பில்லை என்றும் சித்தாராமையாவின் நல விரும்பிகள் அறிவுறுத்தி வருகின்றனராம். இதனால் இம்முடிவைக் கைவிட்டு விடலாமா என்று ஆலோசித்து வருகிறார் சித்தா ராமையா என்று ஒரு தகவல் பரவி வருகிறது. இருப்பினும் சட்ட வல்லுனர்கள் கடமையே கர்மம் என்று, ஜெயலலிதா விடுதலைக் குறித்த தீர்ப்பை ஆராய்ந்து அறிக்கைத் தயாரித்து வருகிறார்களாம்.

0 Responses to ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு இல்லை?