யாழ் மாவட்டத்தில் 60 மதுபானசாலைகள் பாடசாலைகளுக்கு அண்மையில் அமைந்துள்ளதாகவும், அவற்றை மிகவிரைவில் அகற்றவுள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் யாழ் அரச அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “மாணவர்களை இலக்கு வைத்து பல குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. குற்றம் செய்பவர்கள் ஒருபோதும் குற்றத்தை ஏற்றுக்கொள்வதில்லை. தமது பிள்ளைகள் தப்பினால் போதும் என்று யாரும் நடந்து கொள்ள கூடாது. பொது நோக்கோடு ஒவ்வொரு துறையினரும் இணைந்து செயற்பட வேண்டும்
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பை இல்லாமல் செய்வதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர், கல்வி கோட்ட அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்கள் அனைவருடனுமான சந்திப்பு ஒன்று எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பான பல நடவடிக்கைகளை கலந்துரையாடி முடிவுகளை எடுக்கவுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to யாழில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள 60 மதுபானசாலைகளும் அகற்றப்படும்: நா.வேதநாயகம்