Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சித் தலைமையின் தீர்மானங்களை மீறிச் செயற்படும் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தும் கூட்டங்களில் கட்சியின் கட்டுப்பாட்டினை மீறி கலந்து கொண்டவர்களையே நீக்குவதற்கு ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார்.

அத்தோடு, பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவது எனவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

ஊழல், மோசடிகள் மற்றும் அவமதிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டிராத சட்டம், மருத்துவம், கணக்காய்வு, ஊடகம், விளையாட்டு, கலைத்துறை உட்பட நிபுணத்துவ துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ள 80க்கும் மேற்பட்ட புத்திஜீவிகளை தனிப்பட்ட ரீதியில் அவ்வப்போது சந்தித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன, அமைச்சுகளில் உயர் பதவிகளை வகிக்கும் சில அதிகாரிகளுக்கும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சில விரிவுரையாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்க ஜனாதிபதி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் மஹிந்த ஆதரவு அமைப்பாளர்களை நீக்க மைத்திரி தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com