ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு இன்று தாக்கல் இல்லை என்று, கர்நாடக வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மற்றும் சசிகலா,சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு விடுதலை என்று தீர்ப்பு வழங்கியுள்ளார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி. இந்தத் தீர்ப்பு, கணக்கு அறிவிக்கை குற்றத்தோடு அவசர கதியில் வழங்கப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா,இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், அதற்கு கர்நாடக அரசு சார்பாகவும் அனுமதி கிடைத்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆச்சார்யா இன்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், இன்றுதான் மேல்முறையீட்டு டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் ஆய்வு செய்ய 5 நாட்கள் ஆகும் என்பதால், அதற்குப் பின்னரே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதுக் குறித்த அறிக்கைத் தாக்கல் செய்யப்படும் என்றும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடு இன்று இல்லை: ஆச்சார்யா