எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தான் தொடர்ந்தும் முயற்சிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது (இன்று செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவதை நான் தொடர்ந்தும் எதிர்த்தேன். அவருக்கு வேட்புமனு வழங்கப்பட்டது என்னை மீறிய முடிவு. எனினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோல்வியடைவார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க மாட்டேன். சுதந்திரக் கட்சிக்குள்ளிருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரையே பிரதமராக்குவேன்.
எனினும், ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்துக்கான அர்ப்பணித்தவர்கள் பாராளுமன்றத்துக்குள் அதிக பெரும்பான்மை பெற வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த மீண்டும் தோற்பார்: ஜனாதிபதி