எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று அவர் தன்னுடைய வேட்புமனுவினைத் தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அனந்தி சசிதரன், “நான் தேர்தலில் போட்டியிடுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் விரும்பியிருந்தபோதும், தமிழரசுக் கட்சியினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக மக்களது ஆணையையும் கருத்துக்களையும் உறுப்பினர்களின் எண்ணங்களையும் மதிக்காமல் எதேச்சதிகாரமாக நடந்துகொள்கின்றது” என்றுள்ளார்.

0 Responses to பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்