Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது தமிழ் மக்களைப் பார்த்து தோற்றுப் போனவர்கள் என்று அன்று கூறிய மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் தோற்கடித்தோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தென்மராட்சி நவபுரம் முன்பள்ளி வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா கூறியுள்ளதாவது, “விடுதலைக்காக ஜனநாயக முறைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, உலகில் நடைபெற்ற போராட்டங்களைப் போல, இங்கும் ஓர் ஆயுதப் பேராட்டம் இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி விட்டேன் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

எமது மக்களைப் பார்த்து தோற்றுப் போன சமுதாயம் என்று சொன்னார். ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அனைத்து ஜனநாயக சந்தர்ப்பங்களிலும் ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டுள்ளார். மிகத் துல்லியமான சிந்தனையாளராக - சிறந்த இராஜதந்திர ஆற்றல் உள்ளவர்களாக - அறிவுகொண்டவர்களாக எமது மக்கள் மிகுந்த ஜனநாயகவாதிகளாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to ‘தோற்றுப்போனவர்கள்’ என்று எம்மைப் பார்த்துக் கூறி மஹிந்தவை நாம் தோற்கடித்தோம்: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com