உலகிலேயே அதிகார போதை கொண்டோரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதலிடத்திலிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடவை ஜனாதிபதியாகப் போட்டியிட்டபோது, தான் மக்களால் நிராகரிக்கப்பட்டால் தங்கலையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்று இளைப்பாறப்போவதாகக் கூறிய அவர், தோல்வியுற்ற பின்னரும் அதிகாரத்தின் மீது கொண்டிருக்கும் நப்பாசை காரணமாக மீண்டும் வேட்பாளராகக் களமிறங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷ என்பவர் பாராளுமன்ற உறுப்பினரான, அமைச்சராக, பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக பின்னர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்தவர். இவர் அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற நப்பாசை பிடித்த நபர் என்பதுடன், பதவியில் இருப்பதில் பேராசை கொண்டவர். உலகத்திலேயே கூடுதலான தடவைகள் அதிகாரத்தில் இருப்பதற்கு பேராசைப்படுபவர்கள் மஹிந்தவும் அவருடைய குடும்பத்தினரும் என்று பெயர் பெற்றுள்ளனர்.
அதிகாரத்துக்கு வந்தால் தனது குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆதரவாளர்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டிருக்கும் மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும் விசாரணைகளை இல்லாமல் செய்யலாம் என்பதே மஹிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு பிரதான காரணமாகும்.
கடந்த சில நாட்களாக மஹிந்தவுடன் நிற்பவர்கள் முன்னெடுத்த அரசியலை எடுத்துப் பார்த்தால், கடந்த தமது ஆட்சியில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம் என அவர்கள் கூறவில்லை. மாறாக மஹிந்தவுடன் மீண்டெழுவோம் என்பதையே கூறி வந்தனர்.
இதன்மூலம் அவர்கள் மீண்டும் அதிகாரத்தில் இருக்கவே விரும்புகின்றனர் என்பது தெளிவாகிறது. மக்கள் எழுச்சியின் மூலம் ஏற்பட்ட நல்லாட்சிக்குப் பதிலாக மீண்டும் மோசடியான நபர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களே பாராளுமன்றத்துக்குச் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.
மஹிந்தவுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கியதன் மூலம் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி தனக்கு வாக்களித்த மக்களையும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக எதுவித பிரதி பலன்களையும் எதிர்பார்க்காது செயற்பட்டவர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக் கொடுத்துவிட்டார். மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையை மீறிச் செயற்பட்டு விட்டார்.
அது மாத்திரமன்றி ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் மூலம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவருடன் கடந்த அரசிலிருந்து வெளியேறியவர்கள் அதிருப்தி யடைந்துள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to அதிகார போதை கொண்டோரில் மஹிந்த முதலிடம்: ரில்வின் சில்வா