Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான் வீரர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதைத் தொடர்ந்தால், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறித் தாக்குதலில் ஈடுப்பட்டது.இதில் இந்திய வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதைச் சுட்டிகாண்பித்துள்ள ராஜ்நாத் சிங், நாசிக்கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, இந்தியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது என்று கூறினார்.

மேலும், இனியும் இதுப்போன்ற நிலை தொடர்ந்தால், இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்றும், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதைத் தொடர்ந்தால் தக்க பதிலடி: ராஜ்நாத் சிங்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com