Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் சனத்தொகை 2030ஆம் ஆண்டளவில் 145 கோடியாக உயரும் என்று அந்நாட்டின் தேசிய சுகாதார மற்றும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் துணைத் தலைவர் வாங்பீயன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பல ஆண்டுகளாக அமுலில் இருந்த ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் இரத்து செய்யப்பட்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள சீனாவின் தேசிய சுகாதார மற்றும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் துணைத்தலைவர், “2014இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, சீனாவின் மக்கள் தொகை, 136.8 கோடியாக உள்ளது. இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டுள்ள அனுமதியால், 2030இல், சீனாவின் மக்கள் தொகை, 145 கோடியாக அதிகரிக்கும்.

புதிய மசோதா நிறைவேற்றப்பட்டபின், இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள அரசின் அனுமதியை பெற வேண்டும் என்ற சட்டம் நீக்கப்படும். முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தான், இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டுள்ள அனுமதியால், உழைக்கும் சக்தி அதிகரிக்கும். முதியவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்பதுடன், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் இது உதவும்.” என்றுள்ளார்.

0 Responses to சீனாவின் சனத்தொகை 2030இல் 145 கோடியாக உயரும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com