Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரஷ்யாவுக்குச் சொந்தமான விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக எகிப்தில் வெடித்துச் சிதறியது என்பதுதான் உண்மை என்று ரஷ்ய விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

ரஷ்ய விமானத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் நாங்கள்தான் ஏவுகணை வைத்து விமானத்தைத் தகர்த்தோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இயந்திரக் கோளாறு காரணமாக முதலில் வாலில் தீப்பிடித்து பின்னர் விமானம் முழுவதும் தீ பரவி வெடித்துச் சிதறியது என்பதுதான் உண்மை என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாகத்தான் விமானம் வெடித்துச் சிதறியது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இப்படிக் கூறியுள்ளது கோமாளித்தனமாக இருக்கிறது என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.வெடித்துச் சிதறிய விமானத்தில் 7 ஊழியர்கள் மற்றும் 14 குழந்தைகள் உட்பட 217 பயணிகள் இருந்தனர் என்றும் தெரிய வருகிறது.இப்போது விபத்துக்கு உள்ளான விமானம் ஏற்கனவே தரையிறங்கும்போது ஒருமுறை தீப்பிடித்து எரிந்தது என்றும், ரஷ்ய விமானங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவது இல்லைஎன்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to எகிப்தில் விமானம் வெடித்துச் சிதறியது என்பதுதான் உண்மை: ரஷ்யா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com