Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் லலித் கலா அகடமியில் ஜல்லிக்கட்டுக் குறித்த கண்காட்சியைத் துவக்கி வைத்தார் நடிகர் கமல்ஹாசன்.

தமிழகத்தின் புகழ்ப்பெற்ற வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை அகற்ற வேண்டும் என்கிற தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான நிலையில், மனுவின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.வரும் ஜனவரி திருநாளில் பொங்கல் பண்டிகையின்போதுதான் மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இந்த ஜல்லிக்கட்டுக் காளைப் போட்டிகள் மிக விமர்சையாக நடக்கும்.

அதற்கு விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் லலித் கலா அகடமியில் நடைபெறவிருக்கும் இந்த ஜல்லிக்கட்டுக் காளைக் குறித்தக் கண்காட்சியை இன்று நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். அவர் ஜல்லிக்கட்டுக் காளையை அடக்குவது போன்ற காட்சிகள் இருக்கும் விருமாண்டி படத்தின் புகைப்படங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்பதுக் குறிப்பிடத் தக்கது.

ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது என்பது தமிழன் எந்தவித ஆயுதமுமின்றி நிராயுத பாணியாக வீரத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அடக்கும் போட்டி. இதில் மிருக வதை என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதுதான் எனது கருத்து என்று கமல் கூறியது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சென்னை லலித் கலா அகடமியில் ஜல்லிக்கட்டு குறித்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தார் கமல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com