தம்முடைய விடுதலையை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று செவ்வாய்க்கிழமை காலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதனை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நாடு பூராவுமுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகள் மற்றும் புனர்வாழ்வு திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இதுவரை 39 அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!