அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இன்று மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூடியது. அப்போது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
முதலில் இலவச சமையல் எரிவாயு இணைப்பும், ஒரு இலவச மானிய விலை சிலிண்டரும் வழங்கப்படும் என்றும், பின்னர் அடுத்தடுத்து மானிய விலை சிலிண்டரை அவர்கள் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிரதமர் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

0 Responses to மூன்று ஆண்டுகளில் ஐந்து கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு: பிரதமர்