Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலையில் துறைமுகங்கள் அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டிருந்த 756 ஹெக்டேயர் பரப்பளவு காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 12.09.1984 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தியிருந்த 7 கிராம சேவகர் பிரிவில் உள்ள 756 ஹெக்டேயர் பரப்பளவு கொண்டதும் 3 ஆயிரத்து 257 குடியிருப்புக்களைக் கொண்டதுமான காணியை விடுவிப்பதற்கான அனுமதியையே துறைமுக அதிகார சபை வழங்கியுள்ளது என்று துறைமுக அபிவிருத்தி மற்றும் கடற்படை விவகார அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, "பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 42 கிராம சேவகர் பிரிவில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவுகளான இலிங்கநகர், மட்கோ, பூம்புகார், சிங்கபுர, கப்பல்துறை, முத்துநகர், சீனக்குடா, கவாட்டிக்குடா, நாச்சிக்குடா, வெள்ளைமணல், சுமேதங்கரபுர ஆகிய பகுதிகளை 1984.09.12 அறிவிக்கப்பட்ட 314/10 இலக்கமுடைய வர்தமானி அறிவித்தல்படி ஆயிரத்து 975 ஹெக்டேயர் பரப்பளவுடைய காணிகள் துறைமுக அதிகார சபைக்கு உரித்துடையது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் 7 கிராமங்களில் உள்ள காணிகள் தற்போது விடுவிக்கப்படுவதுடன் மீதமுள்ள 4 கிராமங்களான மட்கோ, பூம்புகார், சிங்கபுர, கவாட்டிக்குடா ஆகியவ்ற்றின் 1219 ஹெக்டேயர் பரப்பளவுடைய காணிகளை விடுவிக்க துறைமுக அதிகாரசபையிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.

எனினும், எதிர்வரும் காலங்களில் கட்டம் கட்டமாக இக்காணிகளும் விடுவிக்கப்படும். இப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் அக்காணிகளிலேயே தொடர்ந்து குடியிருக்கலாம். எனினும், தேவைகள் ஏற்படும்போது மாற்று இட ஒழுங்குடன் மற்றும் இணக்கப்பாடுகளுடன் இக்காணி தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to திருகோணமலையில் 756 ஹெக்டேயர் பரப்பளவு காணி துறைமுகங்கள் அதிகார சபையினால் விடுவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com